புதுக்கோட்டை
கட்டுமாவடியில் மாநில அளவிலான பெண்கள் கபடி போட்டி
|கட்டுமாவடியில் மாநில அளவிலான பெண்கள் கபடி போட்டி நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்டம், கட்டுமாவடி உப்பளத்தில் சித்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு காந்தி கபடி விளையாட்டு கழகத்தால் 4-ம் ஆண்டு மாபெரும் மாநில அளவிலான பெண்கள் கபடி போட்டி நடைபெற்றது. போட்டியை ஒன்றிய பெருந்தலைவர் பரணி கார்த்திகேயன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து 25-க்கும் மேற்பட்ட அணிகள் கலந்து கொண்டன. இரவு பகலாக நடந்த போட்டியில் வெற்றி பெற்ற மதுரை அணிக்கு முதல் பரிசு ரூ.30 ஆயிரமும், சுழற்கோப்பையும், 2-ம் இடம் சேலம் அணிக்கு ரூ.20 ஆயிரம், சுழற்கோப்பையும், 3-வது இடம் திருச்சி அணிக்கு ரூ.10 ஆயிரமும், 4-வது இடம் நாமக்கல் அணிக்கு ரூ.10 ஆயிரமும் வழங்கப்பட்டது. இதேபோல் சிறப்பு பரிசு மற்றும் ஆறுதல் பரிசு பெற்ற அணிகளுக்கும் நினைவு கோப்பைகள் வழங்கப்பட்டது. போட்டியை காந்தி கபடி விளையாட்டு கழகத்தை சேர்ந்த மகேந்திரன் சிறப்பாக நடத்தினார். இதில் ஒன்றிய துணை தலைவர் சீனியார் மற்றும் அரசியல் பிரமுகர்களும், ஊராட்சி உறுப்பினர்கள், அறக்கட்டளை உறுப்பினர்கள், கிராமமக்கள், கபடி ரசிகர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு போட்டியை கண்டு களித்தனர்.