< Back
மாநில செய்திகள்
மாநில அளவிலான கால்பந்து போட்டி
கரூர்
மாநில செய்திகள்

மாநில அளவிலான கால்பந்து போட்டி

தினத்தந்தி
|
2 Oct 2023 11:19 PM IST

கரூரில் நடந்த மாநில அளவிலான கால்பந்து போட்டியில் 18 அணிகள் பங்கேற்று விளையாடினர்.

கால்பந்து போட்டி

கரூர் மணவாடியில் மாநில அளவிலான கால்பந்து போட்டி லீக் மற்றும் நாக்-அவுட் முறையில் 2 நாட்கள் நடைபெற்றது. இதில், கரூர், திருச்சி, சேலம், நாமக்கல், திண்டுக்கல், கிருஷ்ணகிரி உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 18 அணிகள் கலந்து கொண்டு விளையாடி தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.

பரிசு-கோப்பை வழங்கல்

இதில் சேலம் அவுரஞ்சி அம்மா அணி முதல் பரிசையும், கரூர் டெக்ஸ் யுனைடெட் கால்பந்து குழு 2-வது பரிசையும், கரூர் பீனிக்ஸ் கால்பந்து அணி 3-வது பரிசையும், நாமக்கல் மெஜஸ்டிக் அணி 4-வது பரிசையும் பெற்றன.

பின்னர் வெற்றிபெற்ற அணி வீரர்களுக்கும், சிறப்பு வீரருக்கும் பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயகாந்தன் பரிசு மற்றும் கோப்பைகளையும் வழங்கினார். இதற்கான ஏற்பாடுகளை டெக்ஸ் யுனைடெட் கால்பந்து அணி செயலாளர் சுப்பிரமணியன் செய்திருந்தார். முடிவில் கால்பந்து பயிற்சியாளர் சசிகுமார் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்