< Back
மாநில செய்திகள்
மாநில அளவிலான சிலம்ப போட்டி: திருச்சி அணி ஒட்டுமொத்த சாம்பியன்
திருச்சி
மாநில செய்திகள்

மாநில அளவிலான சிலம்ப போட்டி: திருச்சி அணி ஒட்டுமொத்த சாம்பியன்

தினத்தந்தி
|
9 Oct 2023 3:41 AM IST

மாநில அளவிலான சிலம்ப போட்டியில் திருச்சி அணி ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்றது.

மாநில அளவிலான சிலம்ப போட்டி மதுரையில் நடந்தது. ஒற்றை கம்பு, இரட்டை கம்பு, சுருள், மான் கொம்பு மற்றும் வேல்கம்பு என 5 நிலைகளில் போட்டிகள் நடந்தன. இதில் மாநிலம் முழுவதிலும் இருந்து 750-க்கும் மேற்பட்ட வீரர்-வீராங்கனைகள் கலந்து கொண்டனர். திருச்சியில் இருந்து முன்னணி வீராங்கனை சுகித்தா உள்பட நூற்றுக்கும் மேற்பட்ட வீரர்-வீராங்கனைகள் கலந்து கொண்டனர். போட்டிகளின் முடிவில் திருச்சி அணியினர் 65 தங்கம், 46 வௌ்ளி மற்றும் 19 வெண்கலம் என மொத்தம் 130 பதக்கங்களை பெற்று ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தை வென்றது. இந்நிலையில் திருச்சி திரும்பிய வீரர்-வீராங்கனைகளுக்கு உலக இளையோர் சிலம்ப சம்மேளன தலைவர் மோகன் மற்றும் பெற்றோர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

மேலும் செய்திகள்