ராணிப்பேட்டை
மாநில அளவிலான கிரிக்கெட் போட்டி
|ராணிப்பேட்டையில் மாநில அளவிலான கிரிக்கெட் போட்டி தொடங்கியது.
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் சார்பில், 14 வயதுக்கு உட்பட்டோருக்கான மாநில அளவில், மாவட்டங்களுக்கு இடையேயான கிரிக்கெட் லீக் போட்டிகள் ராணிப்பேட்டை, பெரம்பலூர், ஈரோடு உள்பட 8 மாவட்டங்களில் 14-ந் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டி நேற்று தொடங்கியது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் மாணிப்பேட்டை கலை அறிவியல் கல்லூரி விளையாட்டு மைதானம், ராணிப்பேட்டை பெல் ஊரக விளையாட்டு மைதானம் ஆகிய 2 இடங்களில் நேற்று போட்டிகள் தொடங்கியது.
ராணிப்பேட்டை கலை அறிவியல் கல்லூரி மைதானத்தில் ராணிப்பேட்டை மற்றும் பெரம்பலூர் மாவட்ட அணிகளுக்கிடையேயான போட்டியை ராணிப்பேட்டை மாவட்ட கிரிக்கெட் சங்க தலைவர் சந்தோஷ் காந்தி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு தொடங்கி வைத்தார்.
பெல் ஊரக விளையாட்டு மைதானத்தில் தேனி மற்றும் ஈரோடு மாவட்ட அணிகளுக்கிடையேயான போட்டியை மாவட்ட கிரிக்கெட் சங்க துணை தலைவரும், பெல் நிறுவன துணைப் பொது மேலாளருமான நாராயணசாமி தொடங்கி வைத்தார்.
இதில் ராணிப்பேட்டை மாவட்ட கிரிக்கெட் சங்க செயலாளர் செல்வகுமார், துணைத் தலைவர்கள் எம்.பிராகஷ், கே.ஆர்.நாராயணசாமி, டி.கே.குமார், எம்.லட்சுமணன், கே.நடராஜன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.