< Back
மாநில செய்திகள்
கரூர்
மாநில செய்திகள்
மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டி: கரூர் அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் வெற்றி
|19 Oct 2022 12:38 AM IST
மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டியில் கரூர் அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் வெற்றி பெற்றனர்.
மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டி கரூரில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய மைதானத்தில் 2 நாட்கள் நடைபெற்றது. இதில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 450 பேர் கலந்து கொண்டு விளையாடினர். இப்போட்டியில் கரூர் அரசு கலைக்கல்லூரி மாணவர் பிரசாந் 46 முதல் 48 கிலோ எடைப்பிரிவில் முதலிடத்தையும், மகாலட்சுமி என்ற மாணவி 52 கிலோ எடை பிரிவில் 3-வது இடமும் பிடித்து சாதனை படைத்தனர். இதையடுத்து, வெற்றி பெற்ற மாணவ-மாணவிக்கு கல்லூரி முதல்வர் மற்றும் பேராசிரியர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.