< Back
மாநில செய்திகள்
மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டி: அன்னவாசல் அரசு பள்ளி மாணவர் தங்கம் வென்று சாதனை
புதுக்கோட்டை
மாநில செய்திகள்

மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டி: அன்னவாசல் அரசு பள்ளி மாணவர் தங்கம் வென்று சாதனை

தினத்தந்தி
|
31 July 2022 12:55 AM IST

மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டியில் அன்னவாசல் அரசு பள்ளி மாணவர் தங்கம் வென்று சாதனை புரிந்தார்.

புதுக்கோட்டை மாவட்டம் சித்தன்னவாசலை சேர்ந்தவர் சின்னையா, கூலி தொழிலாளி. இவரது மகன் ரட்சகன் (வயது 15) இவர் அன்னவாசல் அரசு மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்தநிலையில் குத்துச்சண்டை போட்டியில் ஆர்வம் கொண்ட ரட்சகன் கொல்கத்தாவில் நடைபெற்ற தேசிய அளவிலான போட்டியில் 45 கிலோ எடைப்பிரிவில் கலந்து கொண்டு வெண்கல பதக்கம் வென்றார். பின்னர் கோவாவில் நடைபெற்ற மாநில அளவிலான போட்டியில் 45 கிலோ எடைப்பிரிவில் தங்கம் வென்று சாதனை புரிந்தார். இதன் மூலம் அக்டோபர் மாதம் நடைபெறும் சர்வதேச போட்டியில் பங்கேற்க அவர் தகுதி பெற்றார்.

மேலும் செய்திகள்