கரூர்
கரூரில் 2-வது நாளாக மாநில அளவிலான கூடைப்பந்து போட்டி
|கரூரில் 2-வது நாளாக மாநில அளவிலான கூடைப்பந்து போட்டி நடைபெற்றது.
கரூர் திருவள்ளுவர் மைதானத்தில் நேற்றுமுன்தினம் கரூர் டெக்ஸ்சிட்டி கூடைப்பந்து கழகம் சார்பில் ஆண்களுக்கான 7-ம் ஆண்டு மாநில அளவிலான கூடைப்பந்து போட்டி தொடங்கியது. இதில் கரூர், மதுரை, திண்டுக்கல், சென்னை, திருச்சி, ஈரோடு, கன்னியாகுமரி, சேலம், கும்பகோணம், திருசெங்கோடு உள்ளிட்ட 24 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. இப்போட்டிகள் நாக்-அவுட் முறையில் நடக்கின்றன. நேற்று நடைபெற்ற 2-வது நாள் முதல் போட்டியில் திருச்சி அணியும், நாமக்கல் அணியும் மோதின. இதில் திருச்சி அணி வெற்றி பெற்றது. 2-வது போட்டியில் கரூர் அணியும், திருச்செங்கோடு அணியும் மோதின. இதில் திருச்செங்கோடு அணி வெற்றி பெற்றது. 3-வது போட்டியில் சென்னை அணியும், நாமக்கல் அணியும் மோதின. இதில் சென்னை அணி வெற்றி பெற்றது. 4-வது போட்டியில் கரூர் அணியும், சத்தியமங்கலம் அணியும் மோதின. இதில் கரூர் அணி வெற்றி பெற்றது. இந்த போட்டிகள் நாளை வரை நடக்கிறது.