< Back
மாநில செய்திகள்
விருதுநகர்
மாநில செய்திகள்
மாநில அளவிலான பூப்பந்து போட்டி
|11 Jan 2023 12:40 AM IST
விருதுநகரில் மாநில அளவிலான பூப்பந்தாட்டப்போட்டி நடைபெற்றது.
விருதுநகர் செந்திக் குமார நாடார் கல்லூரியில் தமிழ்நாடு பூப்பந்தாட்ட கழகம் விருதுநகர் மாவட்ட கழகம் சார்பில் மாநில அளவிலான 18 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கு பூப்பந்தாட்ட போட்டி நடைபெற்றது. போட்டியில் மாநிலம் முழுவதும் இருந்து 850-க்கும் மேற்பட்ட வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொண்டனர். எம்.எல்.ஏ. சீனிவாசன் போட்டிகளை தொடங்கி வைத்தார். ஒட்டுமொத்த புள்ளிகளின் அடிப்படையில் மகளிர் பிரிவில் மதுரை அணி முதல் இடத்தை பெற்றது. ஆடவர் பிரிவில் விழுப்புரம் அணி முதல் இடத்தை பெற்றது. பரிசளிப்பு விழாவில் கலெக்டர் மேகநாத ரெட்டி மற்றும் அவரது மனைவி தீபிகா ரெட்டி ஆகியோர் கலந்து கொண்டு வெற்றி பெற்ற வீராங்கனைகளுக்கு கோப்பை மற்றும் சான்றிதழ்களை வழங்கி சிறப்பித்தனர்.