< Back
மாநில செய்திகள்
மாநில கராத்தே போட்டி
திருச்சி
மாநில செய்திகள்

மாநில கராத்தே போட்டி

தினத்தந்தி
|
25 Sept 2023 1:20 AM IST

மாநில கராத்தே போட்டி நடந்தது.

மாநில கராத்தே போட்டி திருச்சி தில்லைநகரில் நேற்று நடைபெற்றது. இதில் மாநிலம் முழுவதிலும் இருந்து 250-க்கும் மேற்பட்ட வீரர்-வீராங்கனைகள் கலந்து கொண்டனர். 6 வயது முதல் 60 வயது வரை உள்ளவர்கள் கலந்து கொண்ட இந்த போட்டிகளை தேசிய நடுவர் ராஜசேகர், வக்கீல் பாஸ்கர் ஆகியோர் தொடங்கி வைத்தனர். போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன. போட்டிகளின் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடித்தவர்கள் வருகிற டிசம்பர் மாதம் அசாமில் நடைபெறும் தேசிய கராத்தே போட்டியில் பங்கேற்க தேர்வு செய்யப்பட்டனர். அதன்படி கிருத்திக், யுவராஜ், செந்தமிழ்ச்செல்வி, பிரணவ் யானேஸ், மோகினிஸ், மாணிக்கவாசகம், குமரகுருபரர், தமிழ்வேந்தன் ஹரிகார்த்திக், சஞ்சய் வர்ஷன், ஸ்ரீராம், சஞ்சய், விஸ்வா, ஓமேஷ், மிதன்ஸ் கோபால் உள்ளிட்டோர் தேசிய போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.

மேலும் செய்திகள்