< Back
மாநில செய்திகள்
நீதிபதி சந்துருவின் பரிந்துரைகளை மாநில அரசு நிராகரிக்க வேண்டும்: ஹெச். ராஜா
மாநில செய்திகள்

நீதிபதி சந்துருவின் பரிந்துரைகளை மாநில அரசு நிராகரிக்க வேண்டும்: ஹெச். ராஜா

தினத்தந்தி
|
19 Jun 2024 4:44 PM IST

நீதிபதி சந்துருவின் பரிந்துரைகளை மாநில அரசு நிராகரிக்க வேண்டும் என பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான ஹெச். ராஜா தெரிவித்துள்ளார்

சென்னை,

பள்ளி, கல்லூரிகளில் சாதிய வன்முறைகளை தடுப்பதற்கு ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு குழு தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் பரிந்துரைகளை வழங்கியது. இந்த நிலையில் நீதிபதி சந்துருவின் பரிந்துரைகளை மாநில அரசு நிராகரிக்க வேண்டும் என பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான ஹெச். ராஜா தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக ஹெச். ராஜா கூறியதாவது,

சர்ச்சைக்குரியதாகவும், ஒரு குறிப்பிட்ட மதத்திற்கு எதிராக காழ்ப்புணர்வுடன் நடவடிக்கை எடுப்பது போல அறிக்கையின் பரிந்துரைகள் இருக்கின்றன. அந்த அறிக்கையை முற்றிலுமாக மாநில அரசு நிராகரிக்க வேண்டும்.ஹிஜாப் அணிந்து வரக்கூடாது என நிர்வாகம் அறிவித்தபோது, அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அணிந்து வர ஆதரவு தெரிவிக்கும் நிலையில் பொட்டு வைக்கக் கூடாது, திலகம் இடக்கூடாது, கையில் கயிறு கட்டக்கூடாது என்பது குறிப்பிட்ட குழுக்களின் பரிந்துரைகள் என்பதில் எந்த மாற்று கருத்தும் இல்லை.ஒரு இடத்தில் அதிக அளவில் உள்ள சமுகத்தினர் சார்பான ஆசிரியர் பணியில் அமர்த்தக்கூடாது என்றால் அதை எவ்வாறு செயல்படுத்த முடியும். பெரும்பான்மையான சமுகத்தை எப்படி ஒடுக்க முடியும்.ஒரு மெஜாரிட்டி மதத்தினரை குறிவைப்பது போல் நீதிபதி சந்துரு அறிக்கை உள்ளது. இந்துக்களுக்கு எதிராக ஒரு உள்நோக்கத்துடன் அவரது அறிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்