சிவகங்கை
மாநில ஐவர் கால்பந்து போட்டி
|மாநில ஐவர் கால்பந்து போட்டி நடைபெற்றது.
காரைக்குடி
காரைக்குடி சங்கராபுரம் ஊராட்சியில் சாக்கோட்டை மேற்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் மாநில அளவிலான ஐவர் கால்பந்து போட்டி நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட செயலாளர் பி.ஆர்.செந்தில்நாதன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி போட்டியை தொடங்கி வைத்தார். சாக்கோட்டை யூனியன் தலைவர் சரண்யாசெந்தில்நாதன் முன்னிலை வகித்தார். 2 நாட்கள் நடைபெற்ற இந்த போட்டியில் 50 அணிகள் கலந்துகொண்டன. நாக் அவுட் முறையில் நடைபெற்ற இறுதிபோட்டியில் காரைக்குடி தெற்குத்தெரு மற்றும் கீழத்தெரு அணிகள் மோதியது. இதில் கீழத்தெரு அணி வெற்றி பெற்று முதல் பரிசை பெற்றது. வெற்றி பெற்ற அணிக்கு ரொக்கம் மற்றும் பரிசு கோப்பை வழங்கப்பட்டது.
பரிசளிப்பு விழாவில் சாக்கோட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் செந்தில்நாதன், கவுன்சிலர்கள் சுப்பிரமணியன், தேவிமீனாள், சமூக ஆர்வலர் புதுமை மகேந்திரன், சாக்கோட்டை மேற்கு ஒன்றிய கிளை செயலாளர்கள், சார்பு அணி நிர்வாகிகள் கலந்துகொண்டனர். ஏற்பாடுகளை தகவல் தொழில்நுட்ப பிரிவு பொறுப்பாளர் திவாகர் செய்திருந்தார்.