< Back
மாநில செய்திகள்
மாநில ஐவர் பூப்பந்தாட்ட போட்டி
திருநெல்வேலி
மாநில செய்திகள்

மாநில ஐவர் பூப்பந்தாட்ட போட்டி

தினத்தந்தி
|
8 Oct 2023 1:36 AM IST

நெல்லையில் மாநில ஐவர் பூப்பந்தாட்ட போட்டி நேற்று நடைபெற்றது.

நெல்லை சந்திப்பு ம.தி.தா. இந்து மேல்நிலைப்பள்ளியில் மாநில அளவிளான ஐவர் பூப்பந்தாட்ட போட்டி நேற்று தொடங்கியது. சென்னை ஸ்பார்ட்டன் பூப்பந்தாட்ட கழகம், ம.தி.தா. இந்து மேல்நிலைப்பள்ளி பூப்பந்தாட்ட கழகம் இணைந்து மறைந்த பூப்பந்தாட்ட வீரர் குமார் இசக்கி நினைவாக 2-வது ஆண்டாக இந்த போட்டிகள் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு முழுவதும் இருந்து 16 அணிகள் பங்கேற்றன.

போட்டிகளை நெல்லை மாவட்ட பூப்பந்தாட்ட கழக தலைவர் பஷீர் அலி தொடங்கி வைத்தார். மாநில பூப்பந்தாட்ட கழக உதவி செயலாளர் வெள்ளபாண்டியன் முன்னிலை வகித்தார். போட்டிகள் லீக் முறையில் நடைபெற்றது. நேற்றைய ஆட்ட முடிவில் சென்னை, எஸ்.ஆர்.எம், ஸ்ரீரெங்கம் மற்றும் திண்டுக்கல் ஆகிய 4 அணிகள் சூப்பர் லீக் சுற்றுக்கு முன்னேறின.

இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலையில் சூப்பர் லீக் சுற்று போட்டிகளும், மாலையில் இறுதி போட்டியும் நடைபெறுகிறது. முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகளுக்கு வெற்றி கோப்பையும், 4 அணிகளுக்கு ரொக்கப்பரிசு வழங்கப்படுகிறது.

மேலும் செய்திகள்