< Back
மாநில செய்திகள்
மாநில சைக்கிளிங் போட்டி
சிவகங்கை
மாநில செய்திகள்

மாநில சைக்கிளிங் போட்டி

தினத்தந்தி
|
2 Oct 2023 12:15 AM IST

மாநில அளவிலான சைக்கிளிங் போட்டி நடைபெற்றது

மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் வளர்மதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:- இந்திய பள்ளிகளுக்கான விளையாட்டு குடும்பம் சார்பில் தேசிய அளவிலான ரோடு மற்றும் ட்ராக் சைக்கிளிங் போட்டி நடைபெற உள்ளது. இதில் 14, 17 மற்றும் 19 வயதுக்குட்பட்ட தமிழ்நாடு சைக்கிளிங் அணிக்கான மாநில அளவிலான தேர்வு போட்டிகள் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றது. போட்டியில் அனைத்து மாவட்டங்களிலும் இருந்து 180 மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் முதல் நான்கு இடம் பிடித்தவர்கள் தேசிய அளவிலான போட்டியில் கலந்து கொள்ள தேர்வு செய்யப்படுவார்கள். தேசிய போட்டிகள் வருகிற ஜனவரி மாதம் ராஞ்சியில் நடைபெற உள்ளது. மாநில அளவிலான ட்ராக் சைக்கிளிங் போட்டி 7-ந் தேதி செங்கல்பட்டு மாவட்டத்தில் நடைபெற உள்ளது. இவ்வாறு அதில் கூறியுள்ளார். காரைக்குடியில் நடைபெற்ற போட்டிகளை உடற்கல்வி ஆய்வாளர் வளர்மதி தொடங்கி வைத்தார். ஏற்பாடுகளை உடற்கல்வி ஆசிரியர்கள் நாகராஜ் மற்றும் லூயி ஆகியோர் செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்