< Back
மாநில செய்திகள்
சிறு தொழில் தொடங்கவங்கிகளில் கடன் உதவி வழங்க வேண்டும்கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் மனு
கடலூர்
மாநில செய்திகள்

சிறு தொழில் தொடங்கவங்கிகளில் கடன் உதவி வழங்க வேண்டும்கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் மனு

தினத்தந்தி
|
18 July 2023 12:15 AM IST

சிறு தொழில் தொடங்க வங்கிகளில் கடன் உதவி வழங்க வேண்டும் என்று கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் மனு அளித்தனர்.

மாற்றுத்திறனாளிகள் அனைவரும் சொந்த உழைப்பில் வாழ நினைக்கிறோம். ஆனால் நாங்கள் சிறு தொழில் தொடங்க வங்கிகளில் கடன் உதவி கேட்டால் தர மறுக்கிறார்கள். கடந்த 2014-2015-ம் ஆண்டுகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு நிதி உதவி வழங்கப்பட்டது. இதன் மூலம் 100-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் சொந்த தொழில் செய்து பிழைப்பு நடத்தினார்கள். ஆனால் இந்த திட்டத்தில் கடந்த 2016-ம் ஆண்டுக்கு பிறகு நிதி உதவி கிடைக்கவில்லை. இதனால் மாற்றுத்திறனாளிகள் பலர் சிறு தொழில் தொடங்க முடியாமல் அவதிப்படுகிறார்கள். ஆகவே எங்களுக்கு சிறு தொழில் செய்து பிழைப்பு நடத்த வங்கிகள் கடன் உதவி வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

Related Tags :
மேலும் செய்திகள்