< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
"உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல்" - நாடாளுமன்ற தொகுதிகளில் தி.மு.க. பொதுக்கூட்டம்
|11 Feb 2024 3:21 PM IST
நாடாளுமன்ற தேர்தலுக்கான பரப்புரை `உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல்' என்ற பெயரில் நடத்தப்படும் என தி.மு.க. அறிவித்துள்ளது.
சென்னை,
`பாசிசம் வீழட்டும், இந்தியா வெல்லட்டும்' என்ற முழக்கத்துடன் நாடாளுமன்ற தொகுதி வாரியாக கூட்டங்கள் நடைபெறும் என தி.மு.க. தலைமைக்கழகம் அறிவித்துள்ளது.
மேலும் 'உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல்' என்ற தலைப்பில் நாடாளுமன்ற தொகுதி வாரியாக தி.மு.க.வின் மக்களவைத் தேர்தல் பிரசார கூட்டங்கள் நடத்தப்படும் என அக்கட்சியின் தலைமை அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டின் உரிமைகளை மீட்க, வரும் 16, 17, 18 ஆகிய தேதிகளில் பொறுப்பு அமைச்சர்களுடன் இணைந்து மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள் உள்ளிட்டோர் நாடாளுமன்றத் தொகுதி வாரியாக கூட்டங்கள் நடத்த வேண்டும் என்று தி.மு.க. தலைமைக்கழகம் அறிவுறுத்தி உள்ளது.