ஸ்டாலினுக்கும், உதயநிதிக்கும் அ.தி.மு.க.வால் தூக்கம் போய்விட்டது: எடப்பாடி பழனிசாமி
|தமிழ்நாட்டில் கஞ்சா விற்காத இடமே இல்லை என்றும் சொல்லும் அளவுக்கு தமிழ்நாடு முழுவதும் போதை பொருள் விற்பனை நடைபெறுகிறது.
சிவகாசி,
விருதுநகர் மக்களவை தொகுதியில் போட்டியிடும் தே.மு.தி.க. வேட்பாளர் விஜயபிரபாகரனை ஆதரித்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
போதை பொருள் கடத்தலுக்கு தி.மு.க.வே துணை நிற்கும் நிலையில், அவற்றை தி.மு.க. அரசு எப்படி தடுக்கும்? நல்லாட்சி நடத்துவதற்காக தி.மு.க.விடம் மக்கள் ஆட்சி அதிகாரத்தை கொடுத்தார்கள். எங்கள் மீது வழக்கு போடுவதற்காக அல்ல. போதைபொருள் கடத்தலுக்குதான் தி.மு.க. அயலக அணியை அமைத்திருக்குமோ என சந்தேகம் உள்ளது.
தனது கட்சிக்காரர்கள் என்ன அட்டுழியம் செய்வார்கள் என்பதை ஸ்டாலினே பொதுக்குழு கூட்டத்தில் ஒப்புக்கொண்டுள்ளார். தி.மு.க. கூட்டணியில் கூட்டணி வேட்பாளர்களுக்கு சீட் கொடுத்து அழ வைக்கிறார்கள். தமிழ்நாட்டில் கஞ்சா விற்காத இடமே இல்லை என்றும் சொல்லும் அளவுக்கு தமிழ்நாடு முழுவதும் போதை பொருள் விற்பனை நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் கஞ்சா விற்காத இடமே இல்லை என்றும் சொல்லும் அளவுக்கு தமிழ்நாடு முழுவதும் போதை பொருள் விற்பனை நடைபெறுகிறது" என்றார்.