விருதுநகர்
ெரயில்வே தரைப்பாலத்தில் தேங்கி நிற்கும் மழைநீர்
|அருப்புக்கோட்டை அருேக ரெயில்வே தரைப்பாலத்தில் தேங்கி நிற்கும் மழைநீரினால் அந்த பகுதியில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
அருப்புக்கோட்டை,
அருப்புக்கோட்டை அருேக ரெயில்வே தரைப்பாலத்தில் தேங்கி நிற்கும் மழைநீரினால் அந்த பகுதியில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
தொடர்மழை
அருப்புக்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தொடர் மழை காரணமாக அருப்புக்கோட்டை ஒன்றியம் பாலையம்பட்டி, கோபாலபுரம், ராமானுஜபுரம் ஆகிய கிராமங்களை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கோபாலபுரத்தில் இருந்து பாலவனத்ததிற்கு செல்லும் சாலையின் இருபுறமும் உள்ள விவசாய நிலங்களில் விவசாயிகள் பருத்தி, கம்பு, சோளம் உள்ளிட்ட பயிர்களை சாகுபடி செய்துள்ளனர்.
ஆதலால் இந்த வழியாக பாலவனத்தம் செல்லும் பாதையில் உள்ள ெரயில்வே தரைப்பாலத்தில் கடந்த சில நாட்களாக பெய்த தொடர் மழையால் மழைநீர் தேங்கி காணப்படுகிறது. இதனால் கோபாலபுரத்தில் இருந்து பாலவநத்தம் செல்லும் சாலை துண்டிக்கப்பட்டுள்ளது.
சாலை துண்டிப்பு
சாலை துண்டிக்கப்பட்டுள்ளதால் அப்பகுதி, விவசாயிகள், பொதுமக்கள் விருதுநகர் உள்ளிட்ட ஊர்களுக்கு செல்வதற்காக பல கிலோமீட்டர் சுற்றி செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
இப்பகுதி வழியாக விவசாய பணிக்கு செல்லும் டிராக்டர்கள், மாட்டு வண்டிகள் கடந்து செல்ல முடியாத சூழ்நிலை உள்ளது. எனவே தரைப்பாலத்தில் தேங்கியுள்ள மழைநீரை அப்புறப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.