< Back
மாநில செய்திகள்
நீலகிரி மாவட்டதில் சீரான மின் விநியோகம் வழங்கப்பட்டு வருகிறது - அமைச்சர் செந்தில் பாலாஜி
மாநில செய்திகள்

"நீலகிரி மாவட்டதில் சீரான மின் விநியோகம் வழங்கப்பட்டு வருகிறது" - அமைச்சர் செந்தில் பாலாஜி

தினத்தந்தி
|
17 July 2022 12:37 AM IST

தமிழகம் முழுவதும் ஒரு லட்சத்து 15 ஆயிரம் மின் கம்பங்கள் தயார் நிலையில் உள்ளதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

நீலகிரி,

நீலகிரி மாவட்டத்தில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் உதகையில் உள்ள விருந்தினர் மாளிகையில் அதிகாரிகளுடன் அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், செந்தில்பாலாஜி, கா.ராமச்சந்திரன் ஆகியோர் ஆலோசனை மேற்கொண்டனர்.

இந்த ஆலோசனையின் போது, பருவமழையால் ஏற்படும் பாதிப்புகள், வெள்ள தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது, பாலங்களை சரிசெய்வது உள்ளிட்ட பணிகள் குறித்து அதிகாரிகளுடன் அமைச்சர்கள் ஆலோசனை நடத்தினர். இதன் பிறகு அமைச்சர்கள் செய்தியாளர்களை சந்தித்து பேசினர். அப்போது மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியதாவது;-

"மழைக்காலங்களில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் கடந்த ஒரு மாதத்தில் சிறப்பாக செய்யப்பட்டுள்ளன. மழையால் துண்டிக்கப்பட்ட உயர் மின் அழுத்த கம்பிகள் ஒரே நாளில் சரிசெய்யப்பட்டு மீண்டும் மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் தற்போது எந்த இடத்திலும் மின் விநியோகம் நிறுத்தப்படவில்லை, சீரான மின் விநியோகம் வழங்கப்பட்டு வருகிறது.

தமிழகம் முழுவதும் ஒரு லட்சத்து 15 ஆயிரம் மின் கம்பங்கள் தயார் நிலையில் உள்ளன. நீலகிரியில் 800 மின் கம்பங்கள் தயார் நிலையில் உள்ளன. ஏதேனும் பாதிப்புகள் ஏற்பட்டால், உடனடியாக அவற்றை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது."

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்