கோயம்புத்தூர்
வியாபாரிக்கு கத்திக்குத்து; தொழிலாளி மீது வழக்கு
|வியாபாரிக்கு கத்திக்குத்து; தொழிலாளி மீது வழக்கு
ஆனைமலை
ஆனைமலையை அடுத்த ஒடையகுளம் பகுதியை சேர்ந்தவர் பகவதியப்பன்(வயது 46). தேங்காய் வியாபாரி. இவரிடம் அதே பகுதியை சேர்ந்த சுந்தர்ராஜ்(28) என்பவர் தேங்காய் பறிக்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.
இந்தநிலையில் பகவதியப்பனிடம் தினக்கூலி ரூ.850-ஐ முன்பணமாக சுந்தர்ராஜ் வாங்கினார். ஆனால் வேலைக்கு செல்லவில்லை. இதற்கிடையில் சுந்தர்ராஜின் தேங்காய் பறிக்கும் கத்தி, பகவதியப்பனிடம் இருந்தது. அதை திருப்பி கேட்க சுந்தர்ராஜ் சென்றார். அப்போது பகவதியப்பன் அவருக்கு கொடுத்த முன்பணம் ரூ.850 ரூபாயை திரும்ப கேட்டார்.
இதனால் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த சுந்தர்ராஜ் சம்பவத்தன்று பகவதியப்பனின் வீட்டிற்கு சென்று தகாத வார்த்தையால் பேசி அவரை கத்தியால் குத்தியதாக தெரிகிறது. இதுகுறித்த புகாரின்பேரில் ஆனைமலை போலீசார் சுந்தர்ராஜ் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.