< Back
மாநில செய்திகள்
ராமநாதபுரம்
மாநில செய்திகள்
பணம் தர மறுத்தவருக்கு கத்திக்குத்து
|9 Jun 2023 12:15 AM IST
பணம் தர மறுத்தவருக்கு கத்திக்குத்து விழுந்தது.
தொண்டி,
திருவாடானை தாலுகா கூகுடி கிராமத்தை சேர்ந்தவர் ஜேம்ஸ் அற்புதராஜ்(வயது 52). இவரது அண்ணன் மகன் சாம்சன்யூஸ்டின்(45). இவர் ஜேம்ஸ் வீட்டில் தங்கி சிற்ப வேலை செய்து வருகிறார். சம்பவத்தன்று அதே ஊரை சேர்ந்த பிரேம்குமார் என்ற பிரின்ஸ்(32) என்பவர் சாம்சனிடம் என்னை கேட்காமல் கோவில் வேலை செய்கிறாய்? பணம் கேட்டால் தர மறுக்கிறாய் எனக்கூறி அவரை கத்தியால் சரமாரியாக குத்தினார். தடுக்க வந்த ஜேம்ஸ் அற்புத ராஜின் மனைவி மற்றும் மைத்துனருக்கு பிரேம்குமார் கொலை மிரட்டல் விடுத்தார். பலத்த காயமடைந்த சாம்சன் திருவாடானை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்த புகாரின்பேரில் திருவாடானை போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரேம்குமாரை கைது செய்தனர்.