< Back
மாநில செய்திகள்
தனியார் பள்ளி ஆசிரியைக்கு கத்திக்குத்து
கிருஷ்ணகிரி
மாநில செய்திகள்

தனியார் பள்ளி ஆசிரியைக்கு கத்திக்குத்து

தினத்தந்தி
|
19 April 2023 12:15 AM IST

கிருஷ்ணகிரியில் தனியார் பள்ளி ஆசிரியையை கத்தியால் குத்திய உறவினரை போலீசார் கைது செய்தனர்.

காவேரிப்பட்டணம் தேர்பேட்டையை சேர்ந்தவர் ரேவதி (வயது 32). தனியார் பள்ளி ஆசிரியை. அதே பகுதியை சேர்ந்தவர் மாதையன் (50). உறவினர்கள். இவர்களுக்குள் சொத்து பிரச்சினை இருந்து வந்தது. கடந்த 16-ந் தேதி கிருஷ்ணகிரி ராசுவீதி துளுக்காணி மாரியம்மன் கோவில் அருகில் அவர்களுக்குள் ஏற்பட்ட பிரச்சினையில் ரேவதியை, மாதையனின் மகன் காந்தி (28) தாக்கி கத்தியால் குத்தியதாக கூறப்படுகிறது. இதில் காயம் அடைந்த அவர், சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இது தொடர்பாக ரேவதி கொடுத்த புகாரின் பேரில் கிருஷ்ணகிரி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து காந்தியை கைது செய்தனர். மேலும் மாதையன், அவரது மனைவி மாரி ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருகிறார்கள்.

மேலும் செய்திகள்