< Back
மாநில செய்திகள்
விருதுநகர்
மாநில செய்திகள்
சமையல் தொழிலாளிக்கு கத்திக்குத்து
|6 March 2023 12:15 AM IST
சமையல் தொழிலாளிக்கு கத்திக்குத்து விழுந்தது.
ஸ்ரீவில்லிபுத்தூர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் கொளூர்பட்டியை சேர்ந்தவர் மாரிமுத்து(வயது 48). சமையல் தொழிலாளி. இவருக்கும், வினோத் என்பவருக்கும் இடையே முன்விரோதம் உள்ளது. சம்பவத்தன்று மீண்டும் மாரிமுத்துவுக்கும், வினோத்துக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
அப்போது ஆத்திரம் அடைந்த வினோத் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் மாரிமுத்துவை குத்தினார். இதில் படுகாயம் அடைந்த மாரிமுத்து ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளார். அவர் கொடுத்த புகாரின் பேரில் ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து வினோத்தை தேடி வருகிறார்கள்.