< Back
மாநில செய்திகள்
முதியவருக்கு கத்திக்குத்து
ராமநாதபுரம்
மாநில செய்திகள்

முதியவருக்கு கத்திக்குத்து

தினத்தந்தி
|
10 Feb 2023 12:15 AM IST

முதியவருக்கு கத்திக்குத்து விழுந்தது.

திருப்புல்லாணி அருகே உள்ள வண்ணாங்குண்டு நேருபுரம் பகுதியை சேர்ந்தவர் மருங்கன் (வயது 70). இவருக்கு சொந்தமான தென்னந்தோப்பில் உள்ள டீசல் மோட்டாரில் இருந்து சில நாட்களாக டீசல் திருடு போனது. நேற்று முன்தினம் தோப்பிற்கு மருங்கன் சென்றபோது அங்கு 3 பேர் நின்றுகொண்டு டீசல் திருட முயன்றார்களாம். இதனை கண்ட மருங்கன் அவர்களை கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் மருங்கனை கீழே தள்ளி அடித்து காயப்படுத்தியதோடு கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார்களாம். இதுகுறித்து மருங்கன் அளித்த புகாரின் அடிப்படையில் திருப்புல்லாணி போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்வனூரை சேர்ந்த ஹரிகரன் (28), தினேஷ் (25), சேகர் (23) ஆகியோரை தேடிவருகின்றனர்.

மேலும் செய்திகள்