< Back
மாநில செய்திகள்
தொழிலாளிக்கு கத்திக்குத்து
கிருஷ்ணகிரி
மாநில செய்திகள்

தொழிலாளிக்கு கத்திக்குத்து

தினத்தந்தி
|
6 July 2022 8:27 PM IST

தேன்கனிக்கோட்டை அருகே தொழிலாளியை அடையாளம் தெரியாத நபர் ஒருவர் கத்தியால் குத்தி விட்டு தப்பியோடி விட்டார்.

தேன்கனிக்கோட்டை

தேன்கனிக்கோட்டை அருகே உள்ள மரக்கட்டா கிராமத்தை சேர்ந்தவர் சரவணன் (வயது 45). கூலித்தொழிலாளி. இவர் மீது கொலை வழக்கு உள்ளது. நேற்று முன்தினம் இரவு இவர் வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர் சரவணனை கத்தியால் குத்தி விட்டு தப்பியோடி விட்டார். இதில் காயமடைந்த அவரை, அக்கம் பக்கத்தினர் மீட்டு தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து தேன்கனிக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜ் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்