பெரம்பலூர்
தோட்டத்தில் மாடு மேய்ந்ததை தட்டி கேட்டவருக்கு கத்திக்குத்து; தந்தை, மகன் சிறையில் அடைப்பு
|குன்னம் அருகே தோட்டத்தில் மாடு மேய்ந்ததை தட்டி கேட்டவருக்கு கத்திக்குத்து விழுந்தது. இந்த சம்பவம் தொடர்பாக தந்தை, மகனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கத்திக்குத்து
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள வரகுபாடி கிராமத்தை சேர்ந்தவர் மாயகிருஷ்ணன். இவரது மனைவி சகுந்தலா (வயது 40). இவர்களுடைய மாடு அருகே உள்ள செல்வவேல் (30) என்பவரது தோட்டத்தில் மேய்ந்துள்ளது.
இதுகுறித்து செல்வவேல் தட்டிகேட்ட போது சகுந்தலா மற்றும் அவரது உறவினர்களான ஜெயராமன் (49), அவரது மகன் ஜெயபிரகாஷ் (23) ஆகியோர் சேர்ந்து தகராறில் ஈடுபட்டனர். இதில் ஆத்திரம் அடைந்த ஜெயராமன், ஜெயபிரகாஷ் ஆகிேயார் செல்வவேலை கட்டையால் தாக்கி கத்தியால் குத்தியதாக கூறப்படுகிறது.
சிறையில் அடைப்பு
இதில் காயமடைந்த செல்வவேல் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து செல்வவேல் கொடுத்த புகாரின்பேரில் மருவத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜெயராமன், ஜெயபிரகாஷ் ஆகியோரை கைது செய்து பெரம்பலூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.