< Back
மாநில செய்திகள்
புனித செபஸ்தியார் ஆலய பெரிய தேர்பவனி
நாகப்பட்டினம்
மாநில செய்திகள்

புனித செபஸ்தியார் ஆலய பெரிய தேர்பவனி

தினத்தந்தி
|
27 Jan 2023 11:58 PM IST

வேளாங்கண்ணியில் புனித செபஸ்தியார் ஆலய பெரிய தேர்பவனி நடந்தது.

வேளாங்கண்ணி:

வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தின் உபகோவிலான புனித செபஸ்தியார் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலய ஆண்டுப் பெருவிழாகடந்த 20-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பெரிய தேர்பவனி நேற்று நடைபெற்றது. முன்னதாக ஆலயத்தில் வேளாங்கண்ணி பேராலய பங்குத்தந்தை அற்புதராஜ் தலைமையில் சிறப்பு திருப்பலி, கூட்டுப்பாடல் பிரார்த்தனை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அதனை தொடர்ந்து மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தேரில் மைக்கேல் சம்மனசு, புனித அந்தோணியார், செபஸ்தியார் எழுந்தருளினர். இதை தொடர்ந்து தேர் முக்கிய வீதிகள் வழியாக சென்று பின்னர் ஆலயத்தை அடைந்தது. இதில் திரளானோர் கலந்து கொண்டனர். இதையடுத்து வாணவேடிக்கை நிகழ்ச்சி நடந்தது.

மேலும் செய்திகள்