< Back
மாநில செய்திகள்
அரியலூர்
மாநில செய்திகள்
புனித பதுவை அந்தோணியார் ஆலய தேர்பவனி
|15 Jun 2022 2:06 AM IST
புனித பதுவை அந்தோணியார் ஆலய தேர்பவனி நடந்தது.
கீழப்பழுவூர்:
அரியலூர் மாவட்டம் கீழப்பழூவூரில் உள்ள புனித பதுவை அந்தோணியார் ஆலய திருவிழா கடந்த 12-ந் தேதி அருட்தந்தை மரிய பிரான்சிஸ் தலைமையில் புனிதரின் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனையடுத்து நேற்று முன்தினம் இரவு ஆடம்பர கூட்டுப்பாடல் திருப்பலி மற்றும் புனிதரின் தேர் பவனி நடைபெற்றது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். கொடி இறக்கத்துடன் நேற்று திருவிழா நிறைவுபெற்றது. இதில் பங்குத்தந்தை தனராஜ், ஊராட்சி மன்ற தலைவர் தனலட்சுமி மருதமுத்து, பங்குத்தந்தைகள் உள்ளிட்ட கிராம காரியஸ்தர்கள் மற்றும் மலத்தான்குளம் பங்கு கிறிஸ்தவ இறை மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.