< Back
மாநில செய்திகள்
புனித லூக்கா ஆலய தேர் திருவிழா
கோயம்புத்தூர்
மாநில செய்திகள்

புனித லூக்கா ஆலய தேர் திருவிழா

தினத்தந்தி
|
20 Oct 2023 12:30 AM IST

வால்பாறையில் புனித லூக்கா ஆலய தேர் திருவிழா நடந்தது.


வால்பாறை கூட்டுறவு காலனி பகுதியில் அமைந்துள்ள புனித லூக்கா தேவாலயத்தின் தேர் திருவிழா மற்றும் பங்கு திருவிழா கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு கடந்த 9 நாட்களாக ஆலயத்தில் சிறப்பு திருப்பலி மறையுரை சிறப்பாக புனித லூக்கா நவநாள் வழிபாடு நடைபெற்று வந்தது. விழா சிறப்பு நாளான நேற்று கேரள மாநிலம் தாமரைச்சேரி ஆயர் ரெமிஜியோ தலைமையிலும், பங்கு குரு ஜிஜோ, மாவட்ட முதன்மை குரு செரியான் ஆகியோர் முன்னிலையில் கூட்டு பாடல் மற்றும் திருப்பலி சிறப்பு மறையுரை நடைபெற்றது. இதனை தொடர்ந்து புனித லூக்கா தேவாலயத்தில் இருந்து வால்பாறை தபால் நிலையம் வரை புனித லூக்கா சொரூபத்தை கையில் சுமந்தபடி தேர் பவனி நடைபெற்றது. பக்தர்கள் கைகளில் மெழுகுவர்த்திகளை ஏந்திய படி தேர் பவனியில் கலந்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து பங்கு மண்டபத்தில் பங்கு திருவிழா மற்றும் தேர்த்திருவிழா கலை நிகழ்ச்சிகள் நடந்தது.

மேலும் செய்திகள்