< Back
மாநில செய்திகள்
புனித லூர்து அன்னை பேராலய தேர்பவனி
நாகப்பட்டினம்
மாநில செய்திகள்

புனித லூர்து அன்னை பேராலய தேர்பவனி

தினத்தந்தி
|
2 Jun 2022 9:03 PM IST

தாணிக்கோட்டகம் புனித லூர்து அன்னை பேராலய தேர்பவனி நடந்தது.

வாய்மேடு:

வாய்மேட்டை அடுத்த தாணிக்கோட்டகம் புனித லூர்து அன்னை தேர்பவனி நேற்றுமுன்தினம் நடைபெற்றது. முன்னதாக மாலையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இதை தொடர்ந்து மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தேர்பவனி நடந்தது. தேர் தாணிக்கோட்டகம் கடைத்தெரு உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் ஆலயத்தை அடந்தது. இதில் பங்குத்தந்தை பன்னீர்செல்வம் உள்பட சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்


மேலும் செய்திகள்