< Back
மாநில செய்திகள்
மலைக்குறவர் மக்களுக்கு எஸ்.டி. சாதி சான்றிதழ் வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம்
அரியலூர்
மாநில செய்திகள்

மலைக்குறவர் மக்களுக்கு எஸ்.டி. சாதி சான்றிதழ் வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம்

தினத்தந்தி
|
22 Oct 2022 1:17 AM IST

மலைக்குறவர் மக்களுக்கு எஸ்.டி. சாதி சான்றிதழ் வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தாமரைக்குளம்:

அரியலூர் அண்ணா சிலை அருகே கோரிக்கைகளை வலியுறுத்தி குறிஞ்சி இன மக்கள் எழுச்சி கழகத்தினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் மலைக்குறவர் மக்களுக்கு மலைகுறவன் என சாதி சான்றிதழ் வழங்க வேண்டும். தங்களை சாதாரண குறவர் மக்களுடன் ஒப்பிடக்கூடாது. தங்களுக்கு எஸ்.டி. சான்றிதழை வழங்க வேண்டும். மேலும், இதற்காக தீக்குளித்து உயிர்நீத்த வேல்முருகன் குடும்பத்தினருக்கு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்துக்கு குறிஞ்சி இன மக்கள் எழுச்சி கழக ஒருங்கிணைப்பாளர் தங்கராசு தலைமை தாங்கினார். மாநில இணைச் செயலாளர் நீலமேகம், மாநில அவைச் செயலாளர் ராமசாமி, மாவட்டச் செயலாளர் திருநாவுக்கரவு உள்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

மேலும் செய்திகள்