< Back
மாநில செய்திகள்
எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு முடிவடைந்தது
புதுக்கோட்டை
மாநில செய்திகள்

எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு முடிவடைந்தது

தினத்தந்தி
|
31 May 2022 12:23 AM IST

எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு முடிவடைந்ததையடுத்து மாணவ-மாணவிகள் உற்சாகமடைந்தனர்.

புதுக்கோட்டை:

எஸ்.எஸ்.எல்.சி.பொதுத்தேர்வு

தமிழகத்தில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு கடந்த 6-ந் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. இந்த நிலையில் நேற்று சமூக அறிவியல் பாடத்துடன் தேர்வு முடிவடைந்தது. புதுக்கோட்டை மாவட்டத்தில் 119 மையங்களில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு நடைபெற்றது. மாவட்டத்தில் 23 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வை எழுதினர். இந்த நிலையில் நேற்றுடன் பொதுத்தேர்வு முடிவடைந்ததால் மாணவ-மாணவிகள் உற்சாகமடைந்தனர்.

செல்பி எடுத்தனர்

புதுக்கோட்டையில் ராணியார் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தேர்வு எழுதிவிட்டு வெளியே வந்த மாணவிகள் ஒருவருக்கொருவர் அன்பை பரிமாறி கொண்டு, கையசைத்தும் சென்றனர். மேலும் 'செல்பி' எடுத்தும் மகிழ்ந்தனர். சில மாணவிகள் பேனா மையை சக மாணவிகள் மீதும் தெளித்தும் மகிழ்ந்தனர். பிளஸ்-1 வகுப்பிற்கு பொதுத்தேர்வு இன்றுடன் (செவ்வாய்க்கிழமை) முடிவடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்