< Back
மாநில செய்திகள்
எஸ்.எஸ்.எல்.சி. மாணவி தற்கொலை முயற்சி
கடலூர்
மாநில செய்திகள்

எஸ்.எஸ்.எல்.சி. மாணவி தற்கொலை முயற்சி

தினத்தந்தி
|
20 Jun 2022 10:59 PM IST

தேர்வில் தேர்ச்சி பெறாததால் எஸ்.எஸ்.எல்.சி. மாணவி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.

கடலூர்,

கடலூர் வண்டிக்குப்பத்தை சேர்ந்தவர் சீதாராமன். இவரது மகள் அபிநயா (வயது 15). இவர் சாத்தங்குப்பத்தில் உள்ள தனியார் பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி. படித்து வந்தார். மேலும் கடந்த மாதம் நடந்த பொதுத்தேர்வை எழுதி விட்டு, அதன் முடிவுக்காக காத்திருந்தார். இந்த நிலையில் நேற்று தேர்வு முடிவு வெளியானது. இதில் ஆங்கிலம், கணக்கு, சமூக அறிவியல் ஆகிய பாடங்களில் அபிநயா தேர்ச்சி பெறவில்லை என கூறப்படுகிறது. இதனால் அவர் மனமுடைந்த நிலையில் காணப்பட்டார்.

இந்நிலையில் மதியம் 2 மணிஅளவில் அவர், வீட்டில் இருந்த விஷத்தை எடுத்து குடித்து விட்டார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர், அபிநயாவை மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். இதுகுறித்த புகாரின் பேரில் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்