ராமநாதபுரம்
எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவிக்கு பாராட்டு
|பரமக்குடியில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவிக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
பரமக்குடி,
எஸ்.எஸ்.எல்.சி. அரசு பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. இதில் பரமக்குடி யாதவா மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் படித்த மாணவி யுவஸ்ரீ 496 மதிப்பெண்களும், மாணவன் அபிஷேக் 494 மதிப்பெண்களும் பெற்றுள்ளனர். மேலும் இருவரும் அறிவியல் படத்தில் 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் அதிக மதிப்பெண் பெற்ற இந்த மாணவ, மாணவிகளை பள்ளியின் தலைவரும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான மலேசியா பாண்டியன், பள்ளியின் தாளாளர் மற்றும் செயலாளர் அழகர்சாமி, பொருளாளர் கண்ணன், துணைத்தலைவர் முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் ஓ.பாஸ்கரன், துணைச்செயலாளர் செல்லக்காரி, கவுரவ ஆலோசகர் சங்கரராஜ் ஆகியோர் பொன்னாடை அணிவித்து நினைவு பரிசுகள் வழங்கி பாராட்டினர்.
இந்த நிகழ்ச்சியில் கல்வி குழு உறுப்பினர்கள் ஓய்வு பெற்ற ஆசிரியர் போஸ், சந்திரசேகரன், ஹரிகிருஷ்ணன் உள்பட ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
முடிவில் பள்ளியின் முதல்வர் பூமாதேவி நன்றி கூறினார்.