< Back
மாநில செய்திகள்
திருப்பூர் மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. அறிவியல் தேர்வை 29 ஆயிரத்து 921 பேர் எழுதினார்கள்.
திருப்பூர்
மாநில செய்திகள்

திருப்பூர் மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. அறிவியல் தேர்வை 29 ஆயிரத்து 921 பேர் எழுதினார்கள்.

தினத்தந்தி
|
26 May 2022 4:01 PM GMT

திருப்பூர் மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. அறிவியல் தேர்வை 29 ஆயிரத்து 921 பேர் எழுதினார்கள்.

திருப்பூர்

திருப்பூர் மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. அறிவியல் தேர்வை 29 ஆயிரத்து 921 பேர் எழுதினார்கள். அறிவியல் தேர்வு மிக எளிதாக இருந்ததாக மாணவ-மாணவிகள் தெரிவித்தனர்.

2 ஆயிரத்து 32 பேர் தேர்வு எழுதவில்லை

எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு தொடங்கி நடந்து வருகிறது. நேற்று அறிவியல் பாடத்தேர்வு நடைபெற்றது. மாவட்டடத்தில் 31 ஆயிரத்து 953 பேர் தேர்வு எழுத விண்ணப்பித்தனர். இவர்களில் 29 ஆயிரத்து 921 பேர் தேர்வு எழுதினார்கள். 2 ஆயிரத்து 32 பேர் தேர்வு எழுதவரவில்லை. அறிவியல் தேர்வு குறித்து மாணவ-மாணவிகள் தெரிவித்த கருத்துகள் வருமாறு:-

மாணவி ரக்‌ஷிதா:-

அறிவியல் பாடத்தேர்வில் 1 மதிப்பெண் எளிதாக இருந்தது. 1 வினா மட்டும் பாடத்தின் உள்ளே இருந்து கேட்கப்பட்டது. 2 மதிப்பெண், 4 மதிப்பெண் வினாக்கள் எளிதாக இருந்தது. பாடப்புத்தகத்தில் 2 மதிப்பெண் வினாவாக கொடுக்கப்பட்டவற்றை இணைத்து, 7 மதிப்பெண் வினாக்களாக கேட்கப்பட்டு இருந்தது. திருப்புதல் தேர்வில் இருந்து கேட்கப்பட்ட வினாக்கள் வந்திருந்தன. தேர்வு எளிதாக அமைந்தது. 85 மதிப்பெண்களுக்கு மேல் கிடைக்கும்.

மாணவி பிரமிகா:-

அனைத்து வினாக்களும் மிக எளிதாக இருந்தது. ஆசிரியர்கள் முக்கியம் என்று தெரிவித்த வினாக்கள் வந்தது. புத்தகத்தின் பாடத்தின் பின்புறம் கேட்கப்பட்ட வினாக்கள் அப்படியே வந்ததால் எந்தவித தயக்கமும் இல்லாமல் விடையளிக்க முடிந்தது. 90 மதிப்பெண்களுக்கு மேல் கிடைக்கும். அனைவரும் எளிதில் தேர்ச்சி பெறலாம்.

மாணவி காயத்திரி:-

2 மதிப்பெண் வினாக்கள் மட்டும் சிறிது கடினமாக இருந்தது. புத்தகத்தில் பாடத்தின் பின்புறம் கேட்கப்பட்ட வினாக்கள் அப்படியே வந்தது. அனைவரும் எளிதில் தேர்ச்சி பெறும் வகையில் இருந்தது. சராசரியாக 60 மதிப்பெண்களுக்கு குறையாமல் அனைவரும் எடுக்க முடியும்.

மிக எளிது

மாணவர் பாலகுரு:-

திருப்புதல் தேர்வில் கேட்கப்பட்ட வினாக்கள் பெரும்பாலும் வந்திருந்தது. ஆசிரியர்கள் தெரிவித்த முக்கிய வினாக்கள் வந்தன. பயமின்றி தேர்வு எழுதினேன். 80 மதிப்பெண்களுக்கு மேல் கிடைக்கும்.

மாணவர் சுஜித்குமார்:-

2 மதிப்பெண் வினாக்கள் சிரமமாக இருந்தது. 1 மதிப்பெண் வினாக்கள் எளிதாக இருந்தது. முழு மதிப்பெண் கிடைக்கும். 2 மதிப்பெண் வினாக்களை சற்று மாற்றி 7 மதிப்பெண் வினாக்களாக 3 வினாக்கள் கேட்டு இருந்தனர். 70 மதிப்பெண்களுக்கு மேல் எடுக்க முடியும். தேர்ச்சி பெறுவது எளிது.

மாணவி ஸ்ரீகா:-

1 மதிப்பெண் வினாக்களில் 1 வினா மட்டும் பாடத்தின் உள்ளே இருந்து கேட்கப்பட்டது. மற்ற வினாக்கள் அனைத்தும் எளிதாக இருந்தது. ஆசிரியர் தெரிவித்த முக்கிய வினாக்கள் வந்தது. எளிதாக இருந்ததால் அனைத்து வினாக்களுக்கும் விடையளித்து விட்டேன். 90 மதிப்பெண்களுக்கு மேல் கிடைக்கும்.

மகிழ்ச்சி

மாணவி நிவேதா:-

அனைத்து வினாக்களுக்கும் விடையளித்து விட்டேன். 90 மதிப்பெண்களுக்கு மேல் கிடைக்கும். அனைவரும் எளிதில் தேர்ச்சி பெறலாம். . அறிவியல் தேர்வுக்கு 1 நாள் மட்டுமே விடுமுறை இருந்தது. கொஞ்சம் பயத்தில் இருந்தோம். ஆனால் வினாக்கள் மிக எளிதாக இருந்ததால் மகிழ்ச்சி.

மாணவி மோனிஷா:-

பாடத்தின் பின்புறம் உள்ள வினாக்கள் அப்படியே வந்தது. இதனால் எந்தவித குழப்பமும் இல்லாமல் தீர்க்கமாக விடையெழுதினேன். 85 மதிப்பெண்களுக்கு மேல் கிடைக்கும்.

Related Tags :
மேலும் செய்திகள்