< Back
மாநில செய்திகள்
எஸ்.எஸ்.எல்.சி. மாணவியை கர்ப்பமாக்கிய 2 மாணவர்கள் மீது வழக்கு
திருவள்ளூர்
மாநில செய்திகள்

எஸ்.எஸ்.எல்.சி. மாணவியை கர்ப்பமாக்கிய 2 மாணவர்கள் மீது வழக்கு

தினத்தந்தி
|
22 July 2022 12:43 PM IST

திருவள்ளூரில் எஸ்.எஸ்.எல்.சி. மாணவியை கர்ப்பமாக்கிய 2 மாணவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

திருவள்ளூர் நகரின் மையப் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் திருவள்ளூர் பகுதியை சேர்ந்த 15 வயது மதிக்கத்தக்க சிறுமி ஒருவர் எஸ்.எஸ்.எல்.சி. பயின்று வருகிறார். இவரை அதே பள்ளியில் 10-ம் வகுப்பு மாணவர்கள் 2 பேர் கடந்த ஜனவரி மாதம் வீட்டுக்கு அழைத்து சென்று பலாத்காரம் செய்து உள்ளனர். தற்போது அந்த மாணவி 5 மாதம் கர்ப்பமாக உள்ளார் என்று கூறப்படுகிறது. இது பற்றி அந்த மாணவி தனது பெற்றோரிடம் கூறி அழுது புலம்பி உள்ளார். இது குறித்து அந்த மாணவியின் தாயார் திருவள்ளூரில் உள்ள அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இது சம்பந்தமாக போலீசார் 2 மாணவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்