< Back
மாநில செய்திகள்
சென்னை விமான நிலைய புதிய இயக்குனராக எஸ்.எஸ்.ராஜு பதவி ஏற்பு
சென்னை
மாநில செய்திகள்

சென்னை விமான நிலைய புதிய இயக்குனராக எஸ்.எஸ்.ராஜு பதவி ஏற்பு

தினத்தந்தி
|
3 May 2023 9:24 AM IST

சென்னை விமான நிலைய புதிய இயக்குனராக எஸ்.எஸ்.ராஜு பதவி ஏற்றார்.

சென்னை, மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இயக்குனராக டாக்டர் சரத்குமார் 2 ஆண்டுகளாக இருந்து வந்தார். இவரது பதவி காலம் கடந்த ஜனவரி மாதம் நிறைவடைந்தது. ஆனால் சென்னையில் கட்டப்பட்டு வந்த ஒருங்கிணைந்த புதிய விமான முனையம் திறப்பு விழா வரை சரத்குமார் பதவியை தொடர்ந்தார். கடந்த மாதம் சென்னை விமான நிலைய புதிய முனையத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார். சென்னை விமான நிலைய இயக்குனராக இருந்த சரத்குமார் அந்தப் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு டெல்லி தலைமையகத்தில் உள்ள இந்திய விமானங்கள் இயக்கம் பிரிவு உறுப்பினர் பதவியை ஏற்றார்.

இதையடுத்து சென்னை விமான நிலைய ஆணையக தற்காலிக புதிய இயக்குனராக பொது மேலாளர் எஸ்.எஸ்.ராஜு பதவி ஏற்றுக்கொண்டார்.

மேலும் செய்திகள்