< Back
மாநில செய்திகள்
எஸ்.ஆர்.எம்.யூ. தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
திண்டுக்கல்
மாநில செய்திகள்

எஸ்.ஆர்.எம்.யூ. தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

தினத்தந்தி
|
10 Oct 2023 5:45 AM IST

எஸ்.ஆர்.எம்.யூ. ரெயில்வே தொழிற்சங்க பழனி கிளை சார்பில், பழனி ரெயில்நிலைய வளாகத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

எஸ்.ஆர்.எம்.யூ. ரெயில்வே தொழிற்சங்க பழனி கிளை சார்பில், பழனி ரெயில்நிலைய வளாகத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இதற்கு உதவி செயலாளர் கில்பர்ட் தலைமை தாங்கினார். செயலாளர் தண்டபாணி, உதவி செயலாளர் ரஞ்சித்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தின் போது, ரெயில்வேயில் தற்காலிக பணியாளர்கள் நியமிக்கப்பட்டு தனியார்மயம் ஆவதை கண்டித்தும், காலிப்பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும் என வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் எஸ்.ஆர்.எம்.யூ. ரெயில்வே தொழிற்சங்கத்தினர் பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்