திருச்சி
எஸ்.ஆர்.எம்.யு.. ரெயில்வே தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
|எஸ்.ஆர்.எம்.யு.. ரெயில்வே தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பொன்மலைப்பட்டி, ஜூன்.30-
`அக்னிபத்' திட்டத்தை திரும்ப பெற வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொன்மலை ெரயில்வே பணிமனை முன்பு எஸ்.ஆர்.எம்.யு. ெரயில்வே தொழிற்சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு சங்க துணை பொதுச்செயலாளர் வீரசேகரன் தலைமை தாங்கி பேசும்போது, உயிர்களை பணயம் வைத்து பணியில் சேரும் ராணுவ வீரர்களுக்கு சலுகைகள் வழங்க மறுத்து 4ஆண்டுகள் சேவை வழங்கும் நடவடிக்கை கண்டிக்கத்தக்கது. ரெயில்வே துறையில் 92 ஆயிரம் காலி பணியிடங்கள் சரண்டர் செய்வதன் மூலம் ஒழித்துள்ளது. பா.ஜ.க. ஆட்சிக்கு வந்த பின்னர் 2 லட்சத்து 98 ஆயிரம் காலியிடங்களையும் ஒழிக்க முயன்று வருகிறது, அரசுக்கு என சொந்தமான விமானம் இல்லாத நாடாக இந்தியா மாறியுள்ள நிலையில் விரைவில் அரசுக்கு சொந்தமான ெரயில்வே இல்லாத நாடாக மாறும். இளைஞர்களுக்கு மற்றும் ராணுவ வீரர்களுக்கு ஆதரவாக இதே நிலையினை மத்திய அரசு தொடரும் பட்சத்தில் ெரயில் நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றார். ஆர்ப்பாட்டத்தில் தொழிற்சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள், ெரயில்வே ஊழியர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இதேபோல் எஸ்.ஆர்.எம்.யு. சார்பில் திருச்சி ரெயில்வே கோட்ட அலுவலக வளாகத்தில் நேற்று மதியம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்கத்தின் துணை பொதுச்செயலாளர் வீரசேகரன் தலைமை தாங்கினார். கிளை செயலாளர் சோமசுந்தரம் முன்னிலை வகித்தார். இதில் ரெயில்வே தொழிலாளர்கள் திரளாக கலந்து கொண்டனர். முடிவில் கோட்ட துணைத்தலைவர் பாபு பெர்னாண்டஸ் நன்றி கூறினார்.