விருதுநகர்
ஸ்ரீவில்லிபுத்தூரில் வாழை தோப்பில் புகுந்து யானைகள் அட்டகாசம்
|ஸ்ரீவில்லிபுத்தூரில் வாழை தோப்பில் புகுந்து யானைகள் நாசம் செய்துள்ளது.
ஸ்ரீவில்லிபுத்தூர்
ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்கு மேற்கு தொடர்ச்சி மலை உள்ளது. இங்கு ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலைபுலிகள் காப்பகம் உள்ளது. இங்கு ஏராளமான யானைகள், புலி, சிறுத்தை, மான், காட்டு எருமைகள், செந்நாய், சிங்கவால், குரங்குகள் ஏராளமாக உள்ளன. இந்நிலையில் யானைகள் இனப்பெருக்கத்திற்காக கூட்டம், கூட்டமாக ஸ்ரீவில்லிபுத்தூர் மலை அடிவார பகுதியில் முகாமிட்டு உள்ளது. கடந்த 15 நாட்களாக மழை அடிவாரப் பகுதியில் உள்ள தென்னந்தோப்புகளை சூறையாடி வருகிறது. இந்நிலையில் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று வனத்துறையினர் யானைகளை விரட்ட அதிரடி நடவடிக்கை எடுத்து இரவு நேரங்களில் யானைகளை அடிவார பகுதியில் உள்ள தோப்புகளுக்கு வராமல் விரட்டி நடவடிக்கை எடுத்தனர்.
இந்தநிலையில் மீண்டும் யானைகள் அடிவாரப்பகுதியை விட்டு ரோட்டில் வந்து இரண்டு கிலோமீட்டர் தூரத்தில் உள்ள வாழை தோப்புகளை நாசம் செய்து உள்ளது. அப்பகுதி விவசாயிகள் நிவாரணம் வழங்க கோரி அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.