விருதுநகர்
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் ஆடிப்பூர திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்
|ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் ஆடிப்பூர திருவிழா ெகாடியேற்றத்துடன் தொடங்கியது. 1-ந்தேதி ேதரோட்டம் நடக்கிறது.
ஸ்ரீவில்லிபுத்தூர்,
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் ஆடிப்பூர திருவிழா ெகாடியேற்றத்துடன் தொடங்கியது. 1-ந்தேதி ேதரோட்டம் நடக்கிறது.
ஆடிப்பூர திருவிழா
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் பிரசித்தி பெற்ற ஆண்டாள் கோவில் உள்ளது. இ்ந்த ேகாவிலில் நடைபெறும் விழாக்களில் உச்ச திருவிழாவாக ஆண்டாள் பிறந்த நட்சத்திரமான பூர நட்சத்திரத்தையொட்டி ஆடி மாதம் ஆடிப்பூர திருவிழா ஆண்டுதோறும் நடைபெறும்.
அதேபோல இந்த ஆண்டு நேற்று காலை கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. முன்னதாக சேனைத்தலைவர் புறப்பாடு மற்றும் கொடி பட்டம் மாட வீதிகளில் வலம் வந்தது. தொடர்ந்து காலை 9 மணிக்கு பூஜைகள் தொடங்கின. 9.45 மணிக்கு கொடி ஏற்றப்பட்டது. கொடியை பாலாஜி பட்டர் ஏற்றினார். இந்த விழாவில் தக்கார் ரவிச்சந்திரன், நிர்வாக அதிகாரி முத்துராஜா மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
சிறப்பு அலங்காரம்
2 ஆண்டுகளுக்கு பிறகு விழா நடைபெறுவதால் பக்தர்களின் வருகை அதிகமாக இருந்தது. விழாவையொட்டி சிறப்பு அலங்காரத்தில் ஆண்டாள், ெரங்கமன்னார் பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். தொடர்ந்து இரவு 9 மணிக்கு 16 வண்டி சப்பரத்தில் ஆண்டாள், ெரங்க மன்னார் வீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது. வெளி மாநிலங்களில் இருந்து வரும் பக்தர்கள் ஸ்ரீவில்லிபுத்தூரில் மண்டபங்களை வாடகைக்கு பிடித்து அங்கு தங்கி 10 நாட்கள் பாசுரங்களை பாடி சாமி தரிசனம் செய்து வருகின்றனர். விழாவில் முக்கிய நிகழ்ச்சியான ஆடிப்பூர தேரோட்டம் வருகிற 1-ந்தேதி நடக்கிறது.
ஆன்மிக சொற்பொழிவு
விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் ஸ்ரீவில்லிபுத்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சபரிநாதன், இன்ஸ்பெக்டர் கீதா ஆகியோர் செய்து வருகின்றனர். ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் ஆடிப்பூர மண்டபத்தின் முன்பு அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட பந்தலில் தினமும் ஆன்மிக சொற்பொழிவு நிகழ்ச்சிகள், பரதநாட்டியம் நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் அதிகாரிகள் செய்து வருகின்றனர்.