< Back
மாநில செய்திகள்
ஶ்ரீவைகுண்டம் பா.ம.க நிர்வாகி மனைவி வெட்டிக் கொலை - அதிர்ச்சி சம்பவம்
மாநில செய்திகள்

ஶ்ரீவைகுண்டம் பா.ம.க நிர்வாகி மனைவி வெட்டிக் கொலை - அதிர்ச்சி சம்பவம்

தினத்தந்தி
|
8 Oct 2022 7:57 PM IST

ஶ்ரீவைகுண்டம் அருகே பா.ம.க நிர்வாகி மனைவி வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

ஶ்ரீவைகுண்டம்,

ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஆதிச்சநல்லூரில் பா.ம.க ஶ்ரீவைகுண்டம் ஒன்றிய செயலாளர் சுப்பிரமணியன் மனைவி பொன்னம்மாள் (45) என்பவர் அதே பகுதியை சேர்ந்த இசக்கி பாண்டி என்பவரால் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து ஶ்ரீவைகுண்டம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஆதிச்சநல்லூரைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன். பாமக ஶ்ரீவைகுண்டம் ஒன்றிய செயலாளரான இவரது மனைவி பொன்னம்மாள். (45) அதே பகுதியைச் சேர்ந்த மூக்கத்தேவர் மகன் இசக்கிபாண்டி குடிபோதையில் நேற்று நள்ளிரவில் பொன்னம்மாளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இதில் ஆத்திரமடைந்த இசக்கிபாண்டியன், அவரது தந்தை மூக்கத்தேவர் மற்றும் தாய் பிச்சம்மாள் ஆகியோர் கட்டையால் பொன்னம்மாளை தாக்கியதாக கூறப்படுகிறது. மேலும் இசக்கிபாண்டி பொன்னம்மாளை அரிவாளால் வெட்டியதாகவும் கூறப்படுகிறது.

இதில் படுகாமடைந்த பொன்னம்மாளை அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு நெல்லை அரசுமருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் ஸ்ரீவைகுண்டம் டி.எஸ்.பி மாயவன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.

இந்நிலையில், நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பொன்னம்மாள் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து கொலை வழக்காக பதிவு செய்து இசக்கிபாண்டி, மூக்கத்தேவர், பிச்சம்மாள் ஆகியோரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்