< Back
மாநில செய்திகள்
ஸ்ரீவைகுண்டம்: மாவட்ட கலெக்டருடன் பைக்கில் சென்று உறைகிணறுகளை ஆய்வு செய்த எம்.எல்.ஏ.
மாநில செய்திகள்

ஸ்ரீவைகுண்டம்: மாவட்ட கலெக்டருடன் பைக்கில் சென்று உறைகிணறுகளை ஆய்வு செய்த எம்.எல்.ஏ.

தினத்தந்தி
|
25 Jun 2023 9:18 PM IST

கார் செல்ல முடியாத பாதையில் புல்லட் பைக்கில் ஹெல்மெட் அணிந்து கொண்டு நேரில் சென்று பார்வையிட்டனர்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டு பகுதியில் உள்ள உறைகிணறுகளை மாவட்ட கலெக்டர் செந்தில் ராஜ் இன்று நேரில் ஆய்வு செய்தார். பொன்னங்குறிச்சி மற்றும் சுப்பிரமணியபுரம் பகுதிகளில் உள்ள உறைகிணறுகளை நேரில் பார்வையிட வருகை தந்தார்.

கார் செல்ல முடியாத பாதையில் புல்லட் பைக்கில் ஹெல்மெட் அணிந்து கொண்டு நேரில் பார்வையிட சென்றார். அவருடன் ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி அமிர்தராஜ் உடன் சென்று உறைகிணறுகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.


மேலும் செய்திகள்