< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
ஸ்ரீரங்கம் கோவில் சித்திரை தேரோட்டம் - திருச்சி மாவட்டத்தில் இன்று உள்ளூர் விடுமுறை
|19 April 2023 6:50 AM IST
ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவில் சித்திரை தேரோட்டத்தை முன்னிட்டு இன்று திருச்சி மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது.
திருச்சி,
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் தொடங்கியுள்ளது. லட்சக்கணக்கான பக்தர்கள் ரங்கா, ரங்கா என்ற பக்தி முழக்கங்களுடன் தேரை வடம் பிடித்து இழுக்கின்றனர்.
4 சித்திரை வீதிகளிலும் தேர் வலம் வரவுள்ள நிலையில் 500-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் தேரோட்டத்தையொட்டி திருச்சி மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது.