< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
ஸ்ரீரங்கம் கோவில் தேரோட்டம்: மே 6-ந்தேதி திருச்சிக்கு உள்ளூர் விடுமுறை
|25 April 2024 2:44 PM IST
திருச்சியில் மாநில அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களுக்கு மே 6-ந்தேதி விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
திருச்சி,
ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோவிலில் வருகிற மே மாதம் 6-ந்தேதி சித்திரை தேரோட்டம் நடைபெறவுள்ளது. இந்த நிலையில் ஸ்ரீரங்கம் கோவில் சித்திரை தேரோட்டத்தை ஒட்டி மே 6-ந்தேதி திருச்சி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
திருச்சியில் மாநில அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களுக்கு மே 6-ந்தேதி விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். மேலும், மே 6-ந்தேதி விடுமுறைக்கு பதிலாக ஜூன் மாதம் 29-ந்தேதி வேலை நாளாக செயல்படும் என்று மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார்.