< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
முழு கொள்ளளவை எட்டிய ஸ்ரீபெரும்புதூர் ஏரி; செம்பரம்பாக்கம் ஏரிக்கு செல்லும் உபரிநீர்
|11 Dec 2022 3:08 AM IST
ஸ்ரீபெரும்புதூர் ஏரி முழு கொள்ளளவை எட்டிய நிலையில் உபரி நீர் செம்பரம்பாக்கம் ஏரிக்கு சென்று கொண்டிருக்கிறது.
காஞ்சிபுரம்,
தொடர்மழை காரணமாக மொத்தம் 1,427 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஸ்ரீபெரும்புதூர் ஏரி முழுவதுமாக நிரம்பியது. இதையடுத்து தற்போது கலங்கல் வழியாக உபரிநீர் செம்பரம்பாக்கம் ஏரிக்கு சென்று கொண்டிருக்கிறது.
இந்நிலையில் அந்த பகுதிகளில் உள்ள இளைஞர்கள் ஆபத்தை உணராமல், சீறிப்பாய்ந்து செல்லும் தண்ணீரின் அருகே நின்று செல்பி எடுத்து வருகின்றனர். இதை போலீசார் தடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.