< Back
மாநில செய்திகள்
சீனிவாச பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்கோப்புக்கட்சி 
விருதுநகர்
மாநில செய்திகள்

சீனிவாச பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்

தினத்தந்தி
|
2 Jun 2023 12:04 AM IST

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சீனிவாச பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.

ஸ்ரீவில்லிபுத்தூர்,

ஸ்ரீவில்லிபுத்தூர் அடுத்துள்ள வத்திராயிருப்பு புதுப்பட்டி பகுதியில் புதிதாக ராஜ கணபதி எல்லம்ம ரேணுகா தேவி சீனிவாச பெருமாள் கோவில் புதிதாக கட்டப்பட்டு உள்ளது. இந்த கோவில் கும்பாபிஷேகம் நேற்று காலை 7.35 மணிக்கு நடைபெற்றது. இதைத்தொடர்ந்து 3 கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றன.கோபுர கலசங்களில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.பரந்தாமன் மற்றும் பிரகாஷ் சாஸ்திரிகள் கும்பாபிஷேகத்தை நடத்தினார்கள்.

இதைத்தொடர்ந்து கடந்த 3 நாட்களாக ஆன்மிக சொற்பொழிவுகள், பரதநாட்டிய நிகழ்ச்சிகள், பஜனை பாடல்கள் நடைபெற்றன.திருப்பணி கமிட்டியினர் விழாவிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். விழாவையொட்டி அன்னதானம் நடைபெற்றது.விழாவிற்கு வந்திருந்தவர்களை புதுப்பட்டி பேரூராட்சி தலைவர் சுப்புலட்சுமி சாந்தாராம் வரவேற்றார்.

Related Tags :
மேலும் செய்திகள்