ராணிப்பேட்டை
சீனிவாச பெருமாள் கோவில் கும்பாபிஷேக விழா
|நெமிலி அருகே சீனிவாச பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
நெமிலியை அடுத்த அகவலம் கிராமத்தில் உள்ள சீனிவாச பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக செவ்வாய்கிழமை காலையில் மங்கள இசை, வேதபாராயணம், தேவத அனுக்ஞை, எஜமான அனுக்ஞை, கணபதி பூஜை, நவகிரஹ ஹோமம் நடைபெற்றது. இரண்டாவது நாளன்று சீனிவாச மூல மந்திர ஹோமம், மஹா பூர்ணாஹூதி மற்றும் தீபாராதனையும் நடைபெற்றது. இதை தொடர்ந்து யாக சாலையிலிருந்து பூஜிக்கப்பட்ட கலசங்கள் வேத மந்திரங்களுடன் எடுத்து செல்லப்பட்டு கோவில் கோபுர கலசத்தின்மீது புனிதநீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.
விழாவில் தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கலந்துகொண்டு சாமிதரிசனம் செய்தார். சோளிங்கர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஏ.எம்.முனிரத்னம், நெமிலி ஒன்றியக்குழு தலைவர் வடிவேலு, முரளிதர சுவாமிகள், மோகனானந்த சுவாமிகள், பாலானந்த சுவாமிகள், ஞானபிரகாச சுவாமிகள், தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் ரவீந்திரன், எஸ்.ஜி.சி. பெருமாள், நெமிலி ஒன்றியக்குழு துணைத்தலைவர் தீனதயாளன், அகவலம் ஒன்றிய கவுன்சிலர் கிருஷ்ணவேணி வெங்கடேசன், அகவலம் ஊராட்சி மன்ற தலைவர் ஆஷா மார்க்கண்டேயன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகி வெங்கடேசன் மற்றும் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.