< Back
மாநில செய்திகள்
மாணவி ஸ்ரீமதி வீட்டில் சி.பி.ஐ. விசாரணை கோரி பதாகை வைத்ததால் பரபரப்பு
கள்ளக்குறிச்சி
மாநில செய்திகள்

மாணவி ஸ்ரீமதி வீட்டில் சி.பி.ஐ. விசாரணை கோரி பதாகை வைத்ததால் பரபரப்பு

தினத்தந்தி
|
21 July 2022 4:48 PM GMT

மாணவி ஸ்ரீமதி வீட்டில் சி.பி.ஐ. விசாரணை கோரி பதாகை வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.


கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே பெரியநெசலூர் கிராமத்தை சேர்ந்தவர் ராமலிங்கம் மகள் ஸ்ரீமதி. கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அடுத்த கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்த இவர், மர்மமான முறையில் உயிரிழந்தார்.

இவரது இறப்புக்கு நீதிக்கேட்டு பல்வேறு அமைப்பினர் நடத்திய போராட்டம் கலவரத்தில் முடிந்தது. பிரேத பரிசோதனை முடிந்தும், மாணவியின் உடலை நேற்று வரை, அவரது பெற்றோர் பெற்றுக்கொள்ள முன்வரவில்லை.

இந்த நிலையில் மாணவி ஸ்ரீமதியின் வீட்டு முன்பு அவரது சாவு குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என மாணவி ஸ்ரீமதியின் புகைப்படத்துடன் பதாகை வைக்கப்பட்டது.

இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகியது. இதையடுத்து அந்த பதாகையை போலீசார் அங்கிருந்து அகற்றினர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்