< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
கர்நாடக சிறையில் அடைக்கப்பட்டிருந்த இலங்கை தமிழர்களை அகதிகள் முகாமிற்கு மாற்ற கோர்ட் உத்தரவு
|20 Sept 2022 6:14 PM IST
14 மாதங்களாக சிறையில் வாடிய இலங்கை தமிழர்களை கோர்ட்டின் கண்டிப்பான உத்தரவால் அகதிகள் முகாமிற்கு கர்நாடக அரசு மாற்றியது.
பெங்களூரு,
கடந்த ஆண்டு வெளிநாடு செல்வதற்காக கர்நாடக மாநிலம் மங்களூருவுக்கு படகு மூலம் தப்பி வந்த 38 இலங்கை தமிழர்கள் கைது செய்யப்பட்டு, பெங்களூருவில் உள்ள பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டனர்.
சிறையில் அடைக்கப்பட்ட இலங்கை தமிழர்களை அகதிகள் முகாமிற்கு மாற்றக்கோரி, தேசிய பாதுகாப்பு முகமை சிறப்பு கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அதன் மீதான விசாரணையின் போது மாநில அரசை கண்டித்த நீதிபதிகள், சிறையில் உள்ள இலங்கை தமிழர்களை அகதிகள் முகாமிற்கு மாற்ற உத்தரவிட்டனர்.