< Back
மாநில செய்திகள்
எரிபொருள் நிரப்ப மீண்டும் சென்னைக்கு வரும் இலங்கை விமானங்கள்..!
மாநில செய்திகள்

எரிபொருள் நிரப்ப மீண்டும் சென்னைக்கு வரும் இலங்கை விமானங்கள்..!

தினத்தந்தி
|
31 Jan 2023 11:59 AM IST

இலங்கையில் விமானங்களில் நிரப்புவதற்கு போதுமான எரிபொருள் கையிருப்பு இல்லை.

ஆலந்தூர்,

இலங்கையில் பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. இதனால் இலங்கையில் விமானங்களுக்கான எரி பொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அந்நாட்டு விமானங்களில் நிரப்புவதற்கு போதுமான எரிபொருள் கையிருப்பு இல்லை.

இதனால் இலங்கையில் இருந்து மெல்பேர்ன், சிட்னி, டோக்கியோ போன்ற தொலைதூர நாடுகளுக்கு செல்ல விமானங்களுக்கு போதுமான எரிபொருள் இல்லாத நிலை உள்ளது. இதனால் மீண்டும் சென்னை, திருவனந்தபுரம், கொச்சின் ஆகிய விமான நிலையங்களில் இலங்கை விமானங்களுக்கு எரிபொருள் நிரப்பப்பட்டு வருகிறது.

சென்னை விமான நிலையத்தில் இலங்கை விமானத்தின் பெரிய ரக ஏ330 விமானத்தில் எரிபொருள் நிரப்பப்படுகிறது. ஆளில்லாத இந்த பெரிய ரக விமானத்தில் பெட்ரோல் மட்டும் சென்னை விமான நிலையத்தில் நிரப்பப்பட்டு மீண்டும் இலங்கைக்கு கொண்டு செல்லப்படுகிறது. இந்த பெரிய ரக விமானத்தில் இருந்து மற்ற இலங்கை விமானங்களுக்கு அது பயன்படுத்தப்படுகிறது.

இதற்காக கடந்த ஆண்டு இலங்கை விமான நிலையத்தில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு ஒப்பந்தம் செய்தது போல இந்த முறையும் செய்யப்பட்டு இருக்கிறது. இலங்கையில் இருந்து அருகில் உள்ள திருவனந்தபுரம், கொச்சி ஆகிய விமான நிலையங்களில் இருந்தும் இலங்கை பெரிய ரக விமானங்கள் எரிபொருள் நிரப்பி தங்கள் நாட்டுக்கு கொண்டு செல்கின்றன.

மேலும் செய்திகள்